Nov 21, 2026
Thisaigal NewsYouTube

பதவி விலகல் கடித விவகாரம்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரிடமிருந்து போலீசுக்கு இன்னும் புகார் கிடைக்கவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பதவி விலகல் கடித விவகாரம்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரிடமிருந்து போலீசுக்கு இன்னும் புகார் கிடைக்கவில்லை

நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிமின் அனுமதியின்றி, அவரது பதவி விலகல் கடிதம் அரண்மனைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, அவரிடமிருந்து நேரடியாக எந்த ஒரு புகாரும், தங்களுக்குக் கிடைக்கவில்லை என அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று சனிக்கிழமை, இந்த விவகாரம் தொடர்பாக, புகார் ஒன்று தங்களுக்குக் கிடைத்துள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் அஸ்வான் அமின் நோர்டின் தெரிவித்திருந்தார்.

65 வயதுடைய ஓய்வுபெற்ற ஆடவர் ஒருவர், இன்று காலை சுமார் 9.55 மணியளவில் சௌ கிட் போலீஸ் நிலையத்தில் அந்தப் புகாரை அளித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளதாகவும் அஹ்மாட் அஸ்வான் அமின் நோர்டின் தெரிவித்திருந்தார்.

அதேவேளையில், மந்திரி பெசாரின் பதவி விலகல் கடித விவகாரத்திற்கும், நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளருக்கு எதிராகச் சதி நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கும் இடையே தொடர்பு உள்ளதா? என்பதையும் விசாரிக்க வேண்டும் என்று புகார்தாரர் போலீசாரிடம் கோரியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →