நேபாள பெருவெள்ளத்தில் மாயமான மூத்த தீயணைப்பு அதிகாரி முஹமட் ஃபக்ருல் முனிர் முஹமட் இசாவின் மனைவி ஹானி ஒத்மான், தனது கணவர் வாங்கிய கடனை வசூலிக்க, தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் மிரட்டல்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
40 வயதான ஹானி இது குறித்து கூறுகையில், கடந்த அக்டோபர் மாதம் முதல் கணவருக்குச் செலுத்தப்படாத கடன் இருப்பதாகக் கூறி ஓர் இணையவழி வணிக நிறுவனம் தன்னைத் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்தார்.
தனது கணவர் மாயமான விவரத்தை விளக்கி, தேவையான ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பிய போதும், அந்த நிறுவனம், கடனைச் செலுத்துமாறு தமக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும் ஹானி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து நாளொன்றுக்கு 10-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கணவரின் வங்கிக் கணக்கை அணுக முடியாததால் பணம் செலுத்துவதில் சிரமம் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.








