Nov 21, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலானில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் - அதனைப் பிடிக்க உடனடி நடவடிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலானில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் - அதனைப் பிடிக்க உடனடி நடவடிக்கை

நெகிரி செம்பிலான் மாநிலம் லாமான் செண்டாயான் குடியிருப்புப் பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று நடமாடுவதாகப் பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, அதன் நடமாட்டத்தை உறுதிப்படுத்த வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான பெர்ஹிலிதான் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தவுள்ளது.

இது குறித்து மாநில பெர்ஹிலிதான் இயக்குநர் வான் மாட் வான் ஹாருன் வெளியிட்டுள்ள தகவலில், புகாரின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இச்சம்பவம் குறித்து இன்று பிற்பகல் 2 மணியளவில் புகார் கிடைத்ததாகவும், சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டதாகக் கூறப்படும் இடமான காலா, நிரந்தர வனக் காப்பகத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, இன்று மாலை அப்பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில், பொதுமக்கள் அந்த வனவிலங்கைக் கண்டால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், அதைத் தொந்தரவு செய்யவோ தாங்களாகவே பிடிக்க முயற்சிக்கவோ கூடாது என்றும் பெர்ஹிலிதான் அறிவுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சீனாவுடனான வர்த்தக உறவின் எதிரொலி: மலேசிய நிறுவனங்கள் அனைத்துலக விநியோகச் சங்கிலியில்  இணைய வாய்ப்பு

சீனாவுடனான வர்த்தக உறவின் எதிரொலி: மலேசிய நிறுவனங்கள் அனைத்துலக விநியோகச் சங்கிலியில் இணைய வாய்ப்பு

இந்திய சமூகத்தினருக்கான தொழில்முனைவோர் வாய்ப்புகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் – அமைச்சர் ரமணன் உறுதி

இந்திய சமூகத்தினருக்கான தொழில்முனைவோர் வாய்ப்புகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் – அமைச்சர் ரமணன் உறுதி

பினாங்கில் அழியும் நிலையில் பாபா நியோன்யா பாரம்பரியம் - முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் கவலை

பினாங்கில் அழியும் நிலையில் பாபா நியோன்யா பாரம்பரியம் - முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் கவலை

கோலா கங்சாரில் 15 வயது மாணவர் மரணம்: முழுமையான விசாரணை நடத்த சிபிஎஸ்எம் வலியுறுத்தல்

கோலா கங்சாரில் 15 வயது மாணவர் மரணம்: முழுமையான விசாரணை நடத்த சிபிஎஸ்எம் வலியுறுத்தல்

புக்கிட் தாகாரில் விபத்து: வடிகால் நீர் சுழலில் சிக்கி இரு தொழிலாளர்கள் பலி

புக்கிட் தாகாரில் விபத்து: வடிகால் நீர் சுழலில் சிக்கி இரு தொழிலாளர்கள் பலி

சிறார்கள் மத்தியில் அதிகரிக்கும் மனநலப் பாதிப்பு, இளவயது கர்ப்பம்: வான் அஸிஸா கவலை

சிறார்கள் மத்தியில் அதிகரிக்கும் மனநலப் பாதிப்பு, இளவயது கர்ப்பம்: வான் அஸிஸா கவலை