பதினாறாவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு பாரிசான் நேஷனல் மீண்டும் மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றினால், பொருள் மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாகிடக ஹாமிடி தெரிவித்துள்ளார்.
தற்போதைய விற்பனை மற்றும் சேவை வரியான எஸ்எஸ்டியைக் காட்டிலும், ஜிஎஸ்டி வரி நியாயமானதும் இலக்குடன் கூடியதுமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இன்று காலையில் கோலாலம்பூரில் நடைபெற்ற மசீச கட்சியின் 30ஆவது மத்திய பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அம்னோ தலைவருமான அஹ்மாட் ஸாஹிட் இதனைத் தெரிவித்தார்.
பாரிசான் நேஷனல் மீண்டும் புத்ராஜெயாவைக் கைப்பற்றினால் ஜிஎஸ்டி வரியை உடனடியாக அமல்படுத்த உறுதிபூண்டுள்ளதாக ஸாஹிட் கூறினார்.
மேலும், அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாரிசான் நேஷனல் உறுப்புக் கட்சிகள் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








