Nov 22, 2026
Thisaigal NewsYouTube

விமானப்படைத் தளத்தில் போதைப்பொருள் பறிமுதல் – பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விமானப்படைத் தளத்தில் போதைப்பொருள் பறிமுதல் – பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படலாம்

அண்மையில் விமானப்படைத் தளம் ஒன்றில் 96 புள்ளி 6 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராணுவம் மற்றும் போலீஸ் துறைத் தளங்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படைத் தளங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படலாம் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்வைத்துள்ள பரிந்துரை, வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டின் அதிகாரப்பூர்வ நுழைவாயில்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், அண்மைய சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்புப் படைத் தளங்களிலும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →