பினாங்கு மாநில ஆட்சியை வேறு எந்தக் கட்சியிடமும் இழக்க விடமாட்டோம் என முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பினாங்கு ஜசெக நடத்திய தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் பேசிய சாவ் கோன் இயோவ், அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற ஜசெகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மேலும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், ஒற்றுமையுடன் செயல்பட்டு மக்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அடுத்த ஆறு முதல் 12 மாதங்களுக்குள் பொதுத்தேர்தல் நடைபெறக்கூடும் என்பதால், அரசுப் பிரதிநிதிகளும் கட்சியின் அடிமட்டப் பொறுப்பாளர்களும் தங்களது செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்றார்.
பினாங்கு இன்ஸ்டிடுட் நடத்திய ஆய்வில், மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து 70.8 விழுக்காட்டினர் திருப்தி தெரிவித்துள்ளனர். அதேவேளை, மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு 59.6 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் 1,686 பேர் பங்கேற்றதாகவும் சாவ் குறிப்பிட்டுள்ளார்.








