Nov 22, 2026
Thisaigal NewsYouTube

தகவல் தொடர்புத் துறை மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரிங்கிட் நிதி! ஃபாஹ்மி அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தகவல் தொடர்புத் துறை மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரிங்கிட் நிதி! ஃபாஹ்மி அறிவிப்பு

பல்கலைக்கழக தகவல்தொடர்புத் துறை மாணவர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், 50 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுவதாக தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில் அறிவித்துள்ளார்.

மாணவர் மன்றங்களின் கூட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் இதழியல் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள இந்த நிதி உதவும் என அவர் தெரிவித்தார்.

ஐந்து பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர் மன்றங்கள் இணைந்துள்ள இக்கூட்டமைப்பை, அனைத்து பொதுப் பல்கலைக்கழகங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும், பின்னர் தனியார் பல்கலைக்கழகங்களையும் இணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

யுஐடிஎம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய தகவல் தொடர்பு மற்றும் ஊடக மாணவர் மாநாட்டில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் ஊடகவியலாளர்களின் வேலைவாய்ப்பும் இதழியல் துறையின் எதிர்காலமும் பாதிக்கப்படாமல் பாதுகாக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து மாணவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →