Nov 23, 2026
Thisaigal NewsYouTube

2026-ஆம் ஆண்டு எஸ்பிஎம் எழுத்துத் தேர்வுகள் இன்று தொடக்கம்: 4,20,898 மாணவர்கள் பங்கேற்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2026-ஆம் ஆண்டு எஸ்பிஎம் எழுத்துத் தேர்வுகள் இன்று தொடக்கம்: 4,20,898 மாணவர்கள் பங்கேற்பு

நாடெங்கிலும் இன்று 2026-ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் பொதுத்தேர்வின் எழுத்துத் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மொத்தம் 4 லட்சத்து 20 ஆயிரத்து 898 பதிவு செய்த மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்கின்றனர்.

இத்தேர்வுகளானது வரும் டிசம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இவ்வாண்டு முதன்முறையாக மலாய்மொழி மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கான செவிமடுத்தல் தேர்வுகள், அதற்குரிய எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் அதே நாளில் நடத்தப்படுகின்றன.

முன்னதாக, செவிமடுத்தல் தேர்வில் பங்கேற்ற பிறகு எழுத்துத் தேர்வுக்கு வராமல் இருந்த மாணவர்கள் மற்றும் வாய்மொழித் தேர்வில் பங்கேற்காமல் எழுத்துத் தேர்வுக்கு மட்டும் வந்த மாணவர்கள் எதிர்கொண்ட வருகைப் பிரச்சினைகளைத் தவிர்க்க இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹமட் அஸாம் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தேர்வின் ஒரு பகுதிக்கு வராமல் இருப்பவர்கள், எழுத்துத் தேர்வில் பங்கேற்றிருந்தாலும் வராதவர்களாகக் கருதப்பட்டு தோல்வியடைந்தவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →