Nov 23, 2026
Thisaigal NewsYouTube

கேஎல்ஐஏ-வில் 2.87 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: தேநீர் பாக்கெட்டுகள், வேப் கருவிகளில் மறைத்து கடத்த முயற்சி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேஎல்ஐஏ-வில் 2.87 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: தேநீர் பாக்கெட்டுகள், வேப் கருவிகளில் மறைத்து கடத்த முயற்சி

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் நடத்திய இரு தனித்தனி சோதனைகளில், 2.87 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் 4 மற்றும் 14-ஆம் தேதிகளில் விமான நிலையத்தின் சிறப்பு வர்த்தகப் பகுதியில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாக கேஎல்ஐஏ சுங்கத்துறை இயக்குநர் அஸ்பாலீலா அக் துவா தெரிவித்துள்ளார்.

முதல் சோதனையில், 15 ஆயிரத்து 456 வேப் கருவிகளுக்கான குப்பிகளில் திரவ வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30.91 லிட்டர் மெத்தாம்பெத்தமின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இதன் மதிப்பு சுமார் 1.54 மில்லியன் ரிங்கிட் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தப் போதைப்பொருட்கள் கூச்சிங், சரவாக்கில் இருந்து சரக்கு விநியோகச் சேவை மூலம் கொண்டுவரப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மற்றொரு சோதனையில், ஓசேனியாவிற்கு அனுப்பத் தயாராக இருந்த இரண்டு பெட்டிகளில், 'ரிஃபைண்ட் சைனீச் டி ' எனக் குறிப்பிடப்பட்ட நெகிழிப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 26.55 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 1.32 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

இந்நிலையில், இரு சம்பவங்கள் தொடர்பாக, அந்த சரக்குகளைக் கையாண்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அஸ்பாலீலா அக் துவா தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வழக்கானது 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் 39B(1)(a) பிரிவின் கீழ் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →