Nov 23, 2026
Thisaigal NewsYouTube

2027 -இல் மலேசியாவுக்கு கூடுதல் வரி வருவாய் - மக்கள் நலத்திட்டங்களுக்கு அதிக வாய்ப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2027 -இல் மலேசியாவுக்கு கூடுதல் வரி வருவாய் - மக்கள் நலத்திட்டங்களுக்கு அதிக வாய்ப்பு

மலேசியாவில் கடந்த 2025-ஆம் ஆண்டு, ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள உலகளாவிய குறைந்தபட்ச வரியான ஜிஎம்டி(GMT) மூலம், வரும் 2027-ஆம் ஆண்டு, ஜூன் மாதத்திற்குப் பிறகே, அரசாங்கத்திற்கு வருவாய் கிடைக்கும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் வெவ்வேறு நாடுகளில் உள்ள வரிச் சலுகைகளையும் சட்டத்தில் உள்ள இடைவெளிகளையும் பயன்படுத்தி குறைந்த வரி செலுத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்த வரி விதிப்பானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகளவில் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களாக இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், 2026 அக்டோபர் மாத நிலவரப்படி 65 நாடுகளும், வட்டாரங்களும் இந்த வரிமுறையை அமல்படுத்தியுள்ளதாகக் துணை நிதியமைச்சர் லியூ சின் தோங் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

ஜிஎம்டி மூலம், அரசாங்கத்திற்கு கூடுதல் வரி வருவாய் கிடைக்கும் போது, அந்த வருவாயை மலேசியர்களின் நலன், கல்வி, மருத்துவம் மற்றும் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ-வில் 2.87 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: தேநீர் பாக்கெட்டுகள், வேப் கருவிகளில் மறைத்து கடத்த முயற்சி

கேஎல்ஐஏ-வில் 2.87 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: தேநீர் பாக்கெட்டுகள், வேப் கருவிகளில் மறைத்து கடத்த முயற்சி

பண்டார் துன் ரஸாக் தொகுதி மேம்பாட்டிற்கு 5.7 மில்லியன் ரிங்கிட் நிதி - வான் அசிஸா தகவல்

பண்டார் துன் ரஸாக் தொகுதி மேம்பாட்டிற்கு 5.7 மில்லியன் ரிங்கிட் நிதி - வான் அசிஸா தகவல்

14 வயது சிறுமி மாயம் - பொதுமக்களின் உதவியை நாடுகிறது நீலாய் போலீஸ்

14 வயது சிறுமி மாயம் - பொதுமக்களின் உதவியை நாடுகிறது நீலாய் போலீஸ்

2026-ஆம் ஆண்டு எஸ்பிஎம் எழுத்துத் தேர்வுகள் இன்று தொடக்கம்: 4,20,898 மாணவர்கள் பங்கேற்பு

2026-ஆம் ஆண்டு எஸ்பிஎம் எழுத்துத் தேர்வுகள் இன்று தொடக்கம்: 4,20,898 மாணவர்கள் பங்கேற்பு

4 லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்களுக்கு பயணத் தடை - குடிநுழைவுத்துறை இயக்குநர் தகவல்

4 லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்களுக்கு பயணத் தடை - குடிநுழைவுத்துறை இயக்குநர் தகவல்

61% மலேசியர்களிடம் அவசரத் தேவைக்குக்கூட ரிம 1,000 சேமிப்பு இல்லை - பேங்க் நெகாரா அறிக்கை

61% மலேசியர்களிடம் அவசரத் தேவைக்குக்கூட ரிம 1,000 சேமிப்பு இல்லை - பேங்க் நெகாரா அறிக்கை