Nov 23, 2026
Thisaigal NewsYouTube

வெளிநாட்டவரைக் கடத்த முயன்ற சந்தேகத்தில் கைது: ஏகேபிஎஸ் அதிகாரி என உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெளிநாட்டவரைக் கடத்த முயன்ற சந்தேகத்தில் கைது: ஏகேபிஎஸ் அதிகாரி என உறுதி

சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பெண் ஒருவரை மலேசியாவுக்குள் அழைத்து வர முயன்றதாகக் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர், மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸின் அதிகாரி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் ஷுஹைலி ஸையின் உறுதிப்படுத்தியதாக ஊடகச் செய்தி கூறுகிறது. கடந்த நவம்பர் 17ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், முனையம் 2-இல் 40 வயதுடைய அந்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பெரிய ஆட்கடத்தல் வலையமைப்பு செயல்படுகிறதா என்பது குறித்தும் போலீஸ் துறை விசாரித்து வருவதாக ஷுஹைலி தெரிவித்தார்.

இத்தகைய குற்றச்செயல்களை அலட்சியமாகக் கருத முடியாது என்றும், விசாரணைக்கு போலீஸ் துறையுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், சக அதிகாரியைக் கைது செய்த பெண் அதிகாரியின் துணிச்சலையும் நேர்மையையும் பாராட்டிய அவர், விரைவில் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதக் குடியேறிகள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
எஃப்.எஃப்.எம். 35: மலேசியத் தமிழ் திரைப்படத் துறைக்கு புதிய உற்சாகம் – தியோ நி சிங்

எஃப்.எஃப்.எம். 35: மலேசியத் தமிழ் திரைப்படத் துறைக்கு புதிய உற்சாகம் – தியோ நி சிங்

கேஎல்ஐஏ-வில் 2.87 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: தேநீர் பாக்கெட்டுகள், வேப் கருவிகளில் மறைத்து கடத்த முயற்சி

கேஎல்ஐஏ-வில் 2.87 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: தேநீர் பாக்கெட்டுகள், வேப் கருவிகளில் மறைத்து கடத்த முயற்சி

2027 -இல் மலேசியாவுக்கு கூடுதல் வரி வருவாய் - மக்கள் நலத்திட்டங்களுக்கு அதிக வாய்ப்பு

2027 -இல் மலேசியாவுக்கு கூடுதல் வரி வருவாய் - மக்கள் நலத்திட்டங்களுக்கு அதிக வாய்ப்பு

பண்டார் துன் ரஸாக் தொகுதி மேம்பாட்டிற்கு 5.7 மில்லியன் ரிங்கிட் நிதி - வான் அசிஸா தகவல்

பண்டார் துன் ரஸாக் தொகுதி மேம்பாட்டிற்கு 5.7 மில்லியன் ரிங்கிட் நிதி - வான் அசிஸா தகவல்

14 வயது சிறுமி மாயம் - பொதுமக்களின் உதவியை நாடுகிறது நீலாய் போலீஸ்

14 வயது சிறுமி மாயம் - பொதுமக்களின் உதவியை நாடுகிறது நீலாய் போலீஸ்

2026-ஆம் ஆண்டு எஸ்பிஎம் எழுத்துத் தேர்வுகள் இன்று தொடக்கம்: 4,20,898 மாணவர்கள் பங்கேற்பு

2026-ஆம் ஆண்டு எஸ்பிஎம் எழுத்துத் தேர்வுகள் இன்று தொடக்கம்: 4,20,898 மாணவர்கள் பங்கேற்பு