சபா மாநில விவசாய, மீன்வளம் மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சர் ஜமாவி ஜாஃபார், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கழிவறையில் வழுக்கி விழுந்ததில் தலையில் காயமடைந்து தையல் போடப்பட்டது.
இன்று காலை விமான நிலையத்தின் விஐபி காத்திருப்புப் பகுதியில் உள்ள கழிவறையைப் பயன்படுத்தியபோது, ஈரமான தரையில் கால் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, கேஎல்ஐஏ மெனாரா மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து, தலையில் ஏற்பட்ட காயத்திற்குத் தையல் போட்டனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விமான நிலையக் கழிவறைகளின் தரை நிலையை மேம்படுத்துவதுடன், அவசர மருத்துவ உதவிகளை விரைவாகப் பெறுவதற்கான வசதிகளையும் மேம்படுத்துமாறு மலேசியா ஏர்போர்ட்ஸ் நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், அவசர உதவி வழங்கும் வகையில் விமான நிலையப் பணியாளர்களுக்குப் போதிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.








