Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பிணைய உள்கட்டமைப்பை மேம்படுத்த பயனர் தரவுகள் பெறப்படும் – அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் விளக்கம்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிணைய உள்கட்டமைப்பை மேம்படுத்த பயனர் தரவுகள் பெறப்படும் – அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் விளக்கம்!

கோலாலம்பூர், ஜூன்.08-

தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் பயனர் தரவுகள், பிணைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. புள்ளி விவரத் துறையும் மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையமும், தொலைத் தொடர்புத் தொழில் தொடர்பான கொள்கைகளை வகுக்க இந்தத் தரவுகளைப் பயன்படுத்தும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் கூறினார்.

தனிப்பட்ட அடையாளத் தகவல்கள் அடங்கிய வடிவில் தரவு வழங்கப்படாது என்றும், இது தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஆணையமும் இணைந்து எடுத்த முடிவு என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பயனர் தரவுகளைச் சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டதாகக் கூறப்படுவது குறித்து மசீச தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →