கோலாலம்பூர், மே 30-
தொடக்கப்பள்ளிகளில் 4 ஆம் ஆண்டு மாணவர்கள் முதல், இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு 100 வெள்ளி மதிப்புள்ள புத்தக பற்றுச்சீட்டு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இந்த 100 வெள்ளி மதிப்பிலான புத்தக பற்றுச்சீட்டு, நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் 2024 ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் அனைத்துலக புத்தக விழாவில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் அனைத்துலக புத்தக விழாவை தொடக்கி வைத்தப்பின்னர் பிரதமர் இதனை அறிவித்தார்.
இந்த 100 வெள்ளி புத்தக பற்றுச்சீட்டு இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.








