பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான 6 மாத கால ஆட்சியை வீழ்த்துவதற்கு பாரிசான் பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் சிலர் மறைமுக சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுவதை அதன் துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
நடப்பு அரசாங்கதைப் பாரிசான் நேஷனல் வீழ்த்தாது. ஏனெனில், நாட்டை நிர்வகிப்பதற்கு ஒரு நிலையான அரசாங்கம் தொடர்ந்து தேவைப்படுகிறது. அதேவேளையில் பல்வேறு கட்சிகளுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குவதற்கு பாரிசான் நேஷனல் உறுதி அளித்துள்ளதாக முகமட் ஹசான் விளக்கினார்.
தவிர தற்போது கட்சித்தாவல் தடை சட்டம் அமலில் இருக்கிறது. பாரிசான் நேஷனலை சேர்ந்த எந்தவொரு எம்.பி.யும், கட்சியின் தலைமையை மீறி, பிற கட்சிக்கு ஆதரவு தர துணிய மாட்டார்கள் என்று முகமட் ஹசான் குறிப்பிட்டார்.
கட்சித் தாவல் நடைபெற்றால், இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சம்பந்தப்பட்ட எம்.பி. தமது நாடாளுமன்றத் தொகுதியை இழக்க நேரிடலாம். இந்நிலையில் யாரும் இந்த விஷப் பரீட்சையில் இறங்க மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக முகமட் ஹசான் தெளிவுபடுத்தினார்.

Related News

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது


