Sep 28, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

Share:

ஜோகூர் பாருவில் உள்ள தங்கும்விடுதி ஒன்றில், பெண் ஒருவர் உடம்பில் பல இடங்களில் கத்திக் குத்து காயங்களுடன் பிணமாகக் கண்டறியப்பட்டார்.

அவரது மார்புப் பகுதியில் மட்டும் ஒன்பது குத்துக் காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் போலீசாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தாமான் மாஜு ஜெயா-விலுள்ள தங்கும்விடுதியின் அறை ஒன்றில் அப்பெண்ணின் சடலம் கண்டறியப்பட்டதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் தெரிவித்துள்ளார்.

பாலியல் தொழிலாளி என நம்பப்படும் 39 வயதான அப்பெண் வெளிநாட்டினர் என்பதும், கொலை செய்து தப்பியோடியவரும் வெளிநாட்டினர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ், இவ்வழக்கானது கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related News