Jun 29, 2026
Thisaigal NewsYouTube
டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்
தற்போதைய செய்திகள்

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

Share:

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

மறைந்த டாயிம் ஜைனுதீன்னின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட அறிக்கை மற்றும் அனைத்துலக ஊடகச் செய்தி தொடர்பில் தாம் காவல் துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜான் தெரிவித்துள்ளார்.

தம்மை ஏன் அழைத்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. அதே சமயம் இந்த நடவடிக்கை எதிர்க்கட்சியை இந்த விவகாரத்தில் இணைக்கும் முயற்சியா என்று வான் சைஃபுல் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகளுடன் தொடர்புடைய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 124B இன் கீழ் விசாரணையை விமர்சித்த அவர், இது ஒற்றுமை அரசாங்கத்தின் அதிகார துஷ்பிரயோகம் என்று கூறினார். இத்தகைய நடவடிக்கைகள் ஊடக சுதந்திரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என வான் சைஃபுல் மேலும் குறிப்பிட்டார்.

பல கல்விமான்கள் மற்றும் அரசு சாரா நிறுவன உறுப்பினர்களும் காவல்துறையால் அழைக்கப்பட்டுள்ளதாகத் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அரசாங்கத்தை கவிழ்க்கவும், தேசிய நிலைத்தன்மையை அச்சுறுத்தவும் பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாக முன்னதாக புக்கிட் அமான் அறிவித்திருந்தது.

அனைத்துலக ஊடகங்களின் உதவியுடன் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது அழுத்தம் கொடுக்க முக்கியப் புள்ளியொன்றின் குடும்ப உறுப்பினர்கள் இங்கிலாந்து நிறுவனமொன்றை ஈடுபடுத்தியதாக அறிக்கையொன்றை அது சுட்டிக் காட்டியது.

அரசாங்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இதற்கு முன் துன் டாயிம் ஜைனுதீன் மின் துணைவியார் நைமா காலித் மறுத்திருந்தார். டாயிம்-மின் குடும்ப உறுப்பினர்களும் அவர்களது வழக்கறிஞர்களும் விசாரணையை நிறுத்தக் கோரி வழக்குத் தொடர்ந்தனர்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு