இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட விபத்தில் 15 வயது மாணவன் உயிரிழந்ததுடன், 16 வயதுடைய மேலும் ஒரு இளைஞர் படுகாயத்திற்கு ஆளாகினார்.
இச்சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் மலாக்கா, ஜாசின், ஜாலான் ஞாலாஸ் - புக்கிட் செங்கே சாலையில் நிகழ்ந்தது. இடைநிலைப்பள்ளி மாணவனான 15 வயது எஸ். சர்வின் என்பவர் இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர். அவர் பயணித்த யமஹா லகென்டா 110 ரக மோட்டார் சைக்கிளும், 16 வயது இளைஞர் பயணித்த மோடடார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் ஜமீல் ரட்ஸி தெரிவித்துள்ளார்.
ஷர்வினை மோட்டார் சைக்கிளில் மோதியதாக கூறப்படும் 16 வயது இளைஞர் கடும் காயங்களுடன் ஜாசின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
புக்கிட் செங்கே வை நோக்கி ஷர்வின் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, தாமான் செரி ஞலாஸ் சாலை வளைவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இது குறித்து 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அகமட் ஜாமில் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


