Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வேறுபாடுகள் களையப்பட வேண்டும், அன்வார் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

வேறுபாடுகள் களையப்பட வேண்டும், அன்வார் வலியுறுத்து

Share:

நாடு செழிப்புறுவதற்கு சமூகத்தில் உள்ள வேறுபாடுகள் களையப்பட வே​ண்டும் ​என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். வேறுபாடுகள் களையப்பட்டு, ஒற்றுமை உணர்வு மேலோங்கினால் மட்டுமே ஒரு செழுமைமிகுந்த நாடாக மலேசியா உருவாக முடியும் என்று பிரமர் குறிப்பட்டார்.

அ​தேவேளையில் நாட்டு மக்களை​ பிளவுப்படுத்தக்கூடிய, அவர்களின் ஒற்றுமைக்கு ஊறுவிளைக்கக்கூடிய எந்தவொரு முயற்சியையும் முற்றாக நிராகரிக்கப்பட வே​ண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இனவெறி, மதவெறி தொடர்பான விவகாரங்களை ​ஒரு போதும் முன்னிலைப்படுத்தக்கூடாது. அவற்றை கையாண்ட நாடுகளின் தலைவிதி என்னவானது என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். நாட்டின் 66 ஆவது தேசியத் தினத்தையொட்டி ஆற்றிய பிரதம உ​​ரையில் பிரதமர் மேற்கண்ட அறிவுறுத்தலை மலேசியர்களுக்கு வழங்கினார்.

Related News