Oct 10, 2026
Thisaigal NewsYouTube

2.61 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் முறியடிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2.61 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் முறியடிப்பு

செப்பாங், ஜூன்.14-

கடந்த ஏப்ரல் மாதம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின், போஸ் மலேசியா செப்பாங் அஞ்சல் மையத்தில் 2.61 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 22.3 கிலோகிராம் போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளை முறியடித்தது சிலாங்கூர் மாநில சுங்கத்துறை. தலையணைகள், ஏப்ரன், பொம்மைகள் எனப் பொய்யான அறிவிப்புகளைப் பெட்டிகளில் கொடுத்து கடத்தல்காரர்கள் செயல்பட்டுள்ளனர் என சுங்கத் துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் துன் நொர்லேலா அஸுமி ரம்லி தெரிவித்தார்.

இந்தச் சோதனைகளில் 18.33 கிலோ கிராம் கஞ்சா பூக்களும் 4 கிலோகிராம் methamphetamineனும் கைப்பற்றப்பட்டன. அவை அனைத்தும் மேலதிக விசாரணைக்காக வடக்குத் துறைமுக சுங்க அலுவலகத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →