Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இரு மாநிலங்களுக்கான எண்ணெய் உரிமம் பணத்தை PKR வங்கி கணக்கிற்கு அன்வார் மடை மாற்றம் செய்தாரா?
தற்போதைய செய்திகள்

இரு மாநிலங்களுக்கான எண்ணெய் உரிமம் பணத்தை PKR வங்கி கணக்கிற்கு அன்வார் மடை மாற்றம் செய்தாரா?

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 13-

கிளந்தான், திரெங்கானு மாநிலங்களுக்கான கோடிக்கணக்கான வெள்ளி எண்ணெய் உரிமம் பணம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது தலைமையிலான PKR கட்சியின் வங்கி கணக்கிற்கு மடை மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுவதை அக்கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் பாஹ்மி பட்ஜில் மறுத்துள்ளார்.

PKR வங்கி கணக்கு அறிக்கைகள் அனைத்தும் சான்றிதழ் பெற்ற நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனத்தினால் தணிக்கை செய்யப்பட்டு, கட்சியின் ஒவ்வொரு மாநாட்டிலும் சமர்ப்பிக்கப்படுகிறன என்று பாஹ்மி பட்ஜில் விளக்கினார்.

PKR கட்சி மற்றும் அதன் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு எதிராக மிக மோசமான, தவறான, அவதூறான தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதாக தொடர்புத்துறை அமைச்சரான பாஹ்மி பட்ஜில் குறிப்பிட்டார்.

இரு மாநிலங்களுக்கான எண்ணெய் உரிமம் பணம், PKR வங்கிக் கணக்கிற்கு மடை மாற்றம் செய்யப்பட்டது போன்ற எந்தவொரு தொகையையும் அறிக்கையில் காண முடியவில்லை.

இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டாகும். இந்த பொய் குற்றச்சாட்டை கட்டவிழ்த்து விட்டு இருக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்படும் என்று இன்று தனது முகநூலில் பாஹ்மி பட்ஜில் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்