Oct 10, 2026
Thisaigal NewsYouTube

யூசோஃப் ரவுத்தர் அரசாங்கத்திற்கும் காவல் துறைக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
யூசோஃப் ரவுத்தர் அரசாங்கத்திற்கும் காவல் துறைக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்

ஜோகூர் பாரு, ஜூன்.15-

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் போதைப் பொருள் கடத்தலிலும் இரண்டு போலி துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் முகமட் யூசோஃப் ரவுத்தர், அரசாங்கத்திற்கும் காவல் துறைக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனத் தகவல் தொடர்புத் துறைத் துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.

சட்டத்தின் கீழ், ஒருவர் நியாயமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டதாக உணர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க அவருக்கு உரிமை உண்டு என்று அவர் கூறினார். அதிகாரிகளைச் சட்டரீதியாக வழக்குத் தொடர்வது ஜனநாயக அமைப்பில் ஒரு முறையான வழியாகும். இஃது அதிகாரப் பகிர்வை உறுதிச் செய்கிறது என்றார் அவர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →