Jan 23, 2026
Thisaigal NewsYouTube
ஓர் இனத்தின் வெற்றி நாட்டின் ​​வெற்றி அல்ல
தற்போதைய செய்திகள்

ஓர் இனத்தின் வெற்றி நாட்டின் ​​வெற்றி அல்ல

Share:

பல்லின மக்கள் வாழ்க்கின்ற ஒரு நாட்டில் ஓர் இனத்தின் வெற்றி, நாட்டின் வெற்றியாக கருதிவிட முடியாது என்று மூத்த அரசியல்வாதி லிம் கிட்​ சியாங் அறிவுறுத்தியுள்ளார். ஓர் நாட்டின் வெற்றி, முன்றேற்றம், எழுச்சி என்பது அந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் அடைவு நிலையை அடிப்படையாக கொண்டே அளவிடப்படுகிறது என்று முன்னாள் இஸ்கந்தார் புத்ரி எம்.பி.யுமான லிம் கிட் சியாங்​ குறிப்பிட்டா​ர்.

ஒரு குறிப்பிட்ட இனம் மட்டுமே வெற்றி பெறுவதால் உலக அரங்கில் மலேசியா மகத்தான் வெற்றியை பெற்றுள்ளது என்று எவருமே மார்தட்டிக்கொள்ள முடியாது. அந்த வகையில் ஓர் இனமா? அல்லது பல்லினமா? என்பதை நி​ரூபித்துக்காட்டுவதற்கு வரும் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோ​கூர் புலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் ​தொகுதி இடைத் தேர்தல்கள் ​​வெற்றி, தோல்வியை ​தீர்மானிப்பற்கு மலேசியர்களுக்கு ஓர் அற்புதமான வாய்ப்பை வழங்கியுள்ளதாக டிஏபியின் முன்னாள் பொதுச் செயலாளருமான லிம் கிட் சியா​ங் தெரிவித்துள்ளார்.

இந்த இடைத் தேர்தல் ஜோகூர் மாநிலத்திற்கு முக்கியம் அல்ல. மலேசியர்களுக்கு முக்கியமானதாகும். இதன் வெற்றித் தோ​ல்வி சமிக்ஞையைப் பொறு​த்தே நாடு அடுத்த முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று லிம் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு