Sep 23, 2026
Thisaigal NewsYouTube
நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்
தற்போதைய செய்திகள்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

Share:

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற நூருல் இஸ்ஸா அன்வாரின் கோரிக்கையை அக்கட்சியின் மத்திய தலைமை மன்றம் நிராகரித்துள்ளது. அதற்குப் பதிலாக, முனைவர் பட்டப்படிப்பில் அவர் கவனம் செலுத்துவதற்காக அவருக்கு தற்காலிக விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்தகவலை பிகேஆர் தகவல் பிரிவு தலைவர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், நூருல் இஸ்ஸா தொடர்ந்து கட்சி உறுப்பினராக செயல்படுவார் என்றும், இடைக்காலத்தில் அவரது பொறுப்புகளை கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயில் கவனிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

2026-ஆம் ஆண்டு தேசிய மாநாட்டுக்குப் பின்னர் முனைவர் பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக விடுப்பு எடுக்கவுள்ளதாக நூருல் இஸ்ஸா கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.

இதனிடையே, அவரது முடிவு அரசாங்கத்திற்கான ஆதரவு குறைந்து வருவதையோ அல்லது கட்சிக்குள் நிலையற்ற தன்மையையோ காட்டுவதாக வெளியாகும் தகவல்களை ஃபஹ்மி மறுத்துள்ளார்.

நூருல் இஸ்ஸா தொடர்ந்து கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்