பிரதமருடனான மடானி ஹரிராய திறந்த இல்ல உபசரிப்பு எதிர்வருகின்ற மாநிலப் பொது தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டம் என கெடா மாநில மந்திரி புசார் முஹமாட் சனுசி முஹமட் நூர் சாடியுள்ளார்.
நாடு முழுவதிலும் நடைபெற்றும் வரும் மடானி திறந்த இல்ல உபசரிப்பு தேவையற்ற ஒன்று எனவும் அதனால் அரசாங்கத்தின் செலவினங்கள் கூடுவதாகவும் சனுசி கூறினார். அரசாங்கத்தின் ஹரி ராய திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்று மட்டும் நடத்தினால் போதுமானது என அவர் மேலும் கூறினார்.
ஹரி ராய திறந்த இல்ல உபசரிப்பு என்ற பெயரில் அன்வார் நாடு முழுக்க சென்று வருகின்ற மாநில பொது தேர்தலுக்காக பிரசாரம் செய்யும் நோக்கத்தைக் கைவிட வேண்டும் என சனுசி கூறினார்.








