Sep 28, 2026
Thisaigal NewsYouTube
ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், மார்ச்.10-

ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் மார்ச் 18 -ஆம் தேதி கூடுதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த கூடுதல் விடுமுறையானது ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ரமலான் பண்டிகையை வரவேற்கத் தயாராகும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 கல்வி ஆண்டுக்கான கல்வி அட்டவணையின் படி, குழு A பள்ளிகளுக்கு மார்ச் 19-ஆம் தேதி ஒரு நாள் கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், குழு B பள்ளிகளுக்கு மார்ச் 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்களுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் விடுமுறையின் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறப்பான முறையில் ரமலான் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகுவதற்கு போதுமான நேரம் கிடைக்கும் என்றும், கல்விச் சமூகத்தின் நலனை முன்னிலைப்படுத்தும் முயற்சியாக இது அமைந்துள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News