Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் குற்றத்தை ஒப்புக்கொள்ள தவறிய இந்திய ஆடவர்
தற்போதைய செய்திகள்

பாலியல் குற்றத்தை ஒப்புக்கொள்ள தவறிய இந்திய ஆடவர்

Share:

தெலுக் இந்தான், மார்ச் 21 -

இரண்டு வாரங்களுக்கு முன்பு, சிறுமியை உடல்ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளி ஒருவர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி இந்தான் நூருல் பாரேனா சைனால் அபிடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 34 வயதுடைய விகெ நாலேந்திரன் குற்றவாளியற்றவர் என்று ஒப்புக் கொண்டார்.

கடந்த மார்ச் 10 ஆம் தேதி காலை 11:30 மணியளவில் தெலுக் இந்தான் பாத்து 3½ - வில் உள்ள ஒரு வீட்டில் 11 வயது சிறுமியிடம் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக அவ்வாடவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 பிரிவு 14 (a) -யின் கீழ் அவ்வாடவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளதாகவும் குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

இவ்வழக்கை மீண்டும் விசாரிப்பதை குறித்து வருகின்ற ஏப்ரல் 25 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி இந்தான் நூருல் பாரேனா சைனால் அபிடின் உத்தரவிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்