Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வீடு புகுந்து கொள்ளையடித்தது, லோரி ஓட்டுநர் கைது
தற்போதைய செய்திகள்

வீடு புகுந்து கொள்ளையடித்தது, லோரி ஓட்டுநர் கைது

Share:

சிலாங்கூர், அம்பாங் ஜெயா, தாமான் டாஹாங் பெர்மாய் என்ற இடத்தில் ஓர் வீட்டில் நுழைந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் லோரி ஓட்டுநர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று முன் தினம் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக 41 வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழி கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

குண்டர் கும்பலைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் அந்த நபர் பூச்சோங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே வீடு புகுந்த திருடியது உட்பட பல்வேறு குற்றவியல் சம்பவங்கள் தொடர்பில் 13 குற்றப்பதிவுகளை கொண்டுள்ளார் என்று ஏசிபி முகமது ஆசம் மேலும் கூறினார்.

அந்த நபர் வீடு புகுந்து கொள்ளையிடும் காட்சியைக் கொண்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Related News