கடந்த வாரம் மளிகைக்கடை ஒன்றில் அதன் பெண் உரிமையாளரை மடக்கி தங்கக் காப்பைக் கொள்ளையிட்டதாக அரச மலேசிய போலீஸ்ப்படையின் கலகத்தடுப்பு போலீஸ்காரர் ஒருவர் கோலத்திரங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தின் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
43 வயது குசாரி ஷாரி என்ற அந்த போலீஸ்காரர் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் உலு திரங்கானு அருகில் உள்ள கம்போக் தோக் பிந்தாங், கோல பெராங்கில் உள்ள மளிகைக்கடையில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 14 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் 392 ஆவது பிரிவின் கீழ் அந்த போலீஸ்காரர் குற்றஞ்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


