ஷா ஆலாம், டிசம்பர்.06-
கெடா மாநில அரசுக்குச் சொந்தமான மாடு வளர்ப்புக் கூட்டத் திட்டத்தில் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் பாடாங் செராய் எம்.பி. டத்தோ அஸ்மான் நஸ்ருடின் மற்றும் வர்த்தகர் ஒருவர் வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
பாஸ் கட்சியைச் சேர்ந்த அந்த எம்.பி.க்கு எதிராக ஷா ஆலாம், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டு கொண்டு வரப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இருவரையும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அஸாம் பாக்கி தெரிவித்தார்.
மாடு வளர்ப்புத் திட்டத்திற்கு தேவையான நிலத்தைப் பெற்றுத் தருவதற்காக 4 லட்சம் ரிங்கிட்டை பாடாங் செராய் எம்.பி. டத்தோ அஸ்மான் லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்டையில் அவர் நேற்று எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.








