May 4, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பானில்  11 நாய்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு; விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகம்
தற்போதைய செய்திகள்

சிரம்பானில் 11 நாய்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு; விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகம்

Share:

சிரம்பானில் உள்ள தாமான் மலேசியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களில் 11 நாய்கள் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவை அனைத்தும் திட்டமிட்டு விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என விலங்குகள் நல அமைப்பான 'Furrykids Safehaven' சந்தேகம் வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த நாய்களில் சில ஏற்கனவே கருத்தடை செய்யப்பட்டு, அப்பகுதி மக்களால் பராமரிக்கப்பட்டு வந்தவை எனக் கூறப்படுகிறது. உயிரிழப்பதற்கு முன்னதாக சில நாய்கள் வாயில் நுரை தள்ளுதல் மற்றும் உடல் துடித்தல் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாய்கள் மட்டுமின்றி, அதே பகுதியில் சில பறவைகளும் இறந்து கிடந்தன. இது தொடர்பாக கால்நடை பராமரிப்புத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related News

மானிய முறையை மாற்றியமைப்போம்": பொருளாதார வளர்ச்சிக்காக டோனி பெர்னாண்டஸ் விடுத்த அறைகூவல்

மானிய முறையை மாற்றியமைப்போம்": பொருளாதார வளர்ச்சிக்காக டோனி பெர்னாண்டஸ் விடுத்த அறைகூவல்

கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

தொழிலாளர் போராட்ட நாயகன் டாக்டர் வி. டேவிட் பெயரில் புதிய விருது: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு அறிவிப்பு

தொழிலாளர் போராட்ட நாயகன் டாக்டர் வி. டேவிட் பெயரில் புதிய விருது: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு அறிவிப்பு

அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது: அப்பீல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது: அப்பீல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

இன்ஸ்பெக்டர் ஷீலா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டத்துறை அலுவலகம் மறுப்பு

இன்ஸ்பெக்டர் ஷீலா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டத்துறை அலுவலகம் மறுப்பு

MRR2 சாலை விபத்து: பெண் பலி, வருங்கால கணவர் காயம்

MRR2 சாலை விபத்து: பெண் பலி, வருங்கால கணவர் காயம்

சிரம்பானில் 11 நாய்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு; விஷம... | Thisaigal News