Jul 10, 2026
Thisaigal NewsYouTube
சுபாங் ஜெயா அடுக்குமாடி குடியிருப்புத் தீ விபத்து: நால்வர் பத்திரமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

சுபாங் ஜெயா அடுக்குமாடி குடியிருப்புத் தீ விபத்து: நால்வர் பத்திரமாக மீட்பு

Share:

சுபாங் ஜெயா,யுஎஸ்ஜே 14 பகுதியில் உள்ள நான்கு மாடி அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

காலை 9.48 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததும், சுபாங் ஜெயா மற்றும் புச்சோங் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 17 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்தத் தீ விபத்தில் முதல் மாடியில் உள்ள ஒரு வீட்டின் 80 விழுக்காட்டுப் பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

அங்கிருந்த 20 வயது மதிக்கத்தக்க வாடகைதாரர் ஒருவரும், நான்காவது மாடியில் அடர்ந்த புகைக்கு நடுவே சிக்கியிருந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று வெளிநாட்டினரும் தீயணைப்பு வீரர்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், காலை 10.12 மணியளவில் தீ முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் சிலாங்கூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

Related News

கொலைகுற்றச்சாட்டு: மூவரை எதிர்வாதம் புரிய உயர் நீதிமன்றம் உத்தரவு

கொலைகுற்றச்சாட்டு: மூவரை எதிர்வாதம் புரிய உயர் நீதிமன்றம் உத்தரவு

அனைத்து மாநிலங்களிலும் ட்ரோன் பிரிவுகள்: குடிநுழைவுத் துறை அதிரடி திட்டம்!

அனைத்து மாநிலங்களிலும் ட்ரோன் பிரிவுகள்: குடிநுழைவுத் துறை அதிரடி திட்டம்!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

சுபாங் ஜெயா அடுக்குமாடி குடியிருப்புத் தீ விபத்து: நால்வர... | Thisaigal News