மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி, தரச்சான்றிதழ் பெறாத 6,916 தகவல் தொடர்பு சாதனங்களைப் பறிமுதல் செய்துள்ளது. 'ஓப் வி380' எனப்படும் இந்த அதிரடிச் சோதனை, கிள்ளான் மற்றும் ஜோகூர் பாருவில் உள்ள ஒரு கிடங்கு மற்றும் அலுவலகத்தில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி நடத்தப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் ஒட்டுமொத்த மதிப்பு 2.06 மில்லியன் ரிங்கிட் ஆகும். இதில் கம்பியில்லா சிசிடிவி, கணினிகள் மற்றும் வைஃபை ரவுட்டர்கள் அடங்கும். இவை டிக்டாக் ஷாப் மற்றும் ஷோப்பி போன்ற வலைத்தளங்கள் வழியாக விற்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பற்ற இத்தகைய சாதனங்களை விற்பவர்களுக்கு 3 லட்சம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். பொதுமக்கள் தரச்சான்றிதழ் பெற்ற சாதனங்களை மட்டுமே வாங்குமாறு அந்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.











