மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா, , நாட்டின் பொருளாதாரத்தில் இந்தியச் சமூகத்தின் பங்களிப்பை வலுப்படுத்த 'உயர்வு மடானி மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 700-க்கும் மேற்பட்ட இந்தியத் தொழில்முனைவோருக்கு 50,000 ரிங்கிட் வரை நிதி உதவி வழங்கப்படும்.
வியாபார வளர்ச்சியின் அடிப்படையில் மைக்ரோவிற்கு 20,000 ரிங்கிட் வரையிலும், குரோத் திட்டத்திற்கு 35,000 ரிங்கிட் வரையிலும், ஹை திட்டத்திற்கு 50,000 ரிங்கிட் வரையிலும் மூன்று பிரிவுகளாக இந்த மானியம் பிரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மடானி பொருளாதாரக் கொள்கையின் கீழ் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 55 வயதிற்குட்பட்ட இந்தியர்கள், மலேசியப் பிரஜைகளாகவும், எஸ்எஸ்எம் வணிகப் பதிவைக் கொண்டிருக்கவும் வேண்டும். விண்ணப்பங்கள் இன்று தொடங்கி, வரும் ஜூலை 13-ஆம் தேதி மாலை 5 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.








