Jul 10, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் தேர்தல்: அவதூறுகளைத் தவிர்த்து கொள்கை விவாதங்களில் ஈடுபடுங்கள் - மஸ்லி மாலிக்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் தேர்தல்: அவதூறுகளைத் தவிர்த்து கொள்கை விவாதங்களில் ஈடுபடுங்கள் - மஸ்லி மாலிக்

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தலில் அவதூறு அரசியலைத் தவிர்த்து, கொள்கை சார்ந்த விவாதங்களுக்குப் பக்கத்தான் ஹரப்பான் முக்கியத்துவம் அளிக்கும் என அதன் புத்ரி வங்சா தொகுதி வேட்பாளர் டாக்டர் மஸ்லி மாலிக் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் வேளையில் தமக்கு எதிரான பழைய காணொளி ஒன்று பரப்பப்படுவது குறித்து கருத்துரைத்த முன்னாள் கல்வி அமைச்சரான அவர், இத்தகைய நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள் இன்னும் தீவிரமடையக்கூடும் என்றார். எனினும், தங்களின் கவனம் எப்போதும் நல்ஆளுமை மற்றும் மக்களுக்குச் சேவையாற்றுவதிலேயே இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் தங்களின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது தகுதி மற்றும் நம்பகத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், சமய அறிஞர்கள் மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மலாய்-முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்து தீவிரப்போக்கற்ற தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பாஸ் கட்சியின் முகநூல் பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில் டாக்டர் மஸ்லீ மாலிக் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்