Sep 25, 2026
Thisaigal NewsYouTube
அபராதம் விதித்த போலீசாரை அவமதித்த இளைஞர் கைது
தற்போதைய செய்திகள்

அபராதம் விதித்த போலீசாரை அவமதித்த இளைஞர் கைது

Share:

கோலாலம்பூரில் போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதித்த இரண்டு போலீசாரை ஆபாசமாக திட்டி, அச்சுறுத்திய 25 வயது ஆடவர் ஒருவரை போலீஸ் துறை கைது செய்துள்ளது.

புரோட்டான் பிரேவே காரை ஓட்டி வந்த அந்த நபர், அபராதம் விதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்து போலீசாரை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, இன்று அதிகாலை 2.36 மணியளவில் செந்தூல், ஜாலான் டத்தோ செனு பகுதியில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டு, 3 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொது ஊழியரை கடமை செய்ய விடாமல் தடுத்தது மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் பஸ்ரீ சாகோனி தெரிவித்தார்.

Related News

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்