ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் சிகமாட் நகர் வெள்ளத்தில் மிதந்து வருவது பெரும் பொருள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகமாட் நகர் இதுவரையில் இப்படியொரு அடை மழையையும், தொடர் வெள்ளத்தையும் கண்டதில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
இந்த வெள்ளப்பிரச்னை சிகமாட் நகருக்கு புதியது அல்ல என்றாலும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பெரும் பொருட் சேதத்தை ஏற்படுத்திய மிகப்பெரிய வெள்ளப் பேரிடரை சிகமாட் மக்கள் இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு வீட்டிலும் சராசரி ஒரு மீட்டருக்கும் உயரத்தில் கடல் போல் நீர் சூழ்ந்து கொண்டு இருப்பதால் தாங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அவசர அவசரமாக வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக அவர்கள் தங்கள் துயரத்தை பகிர்ந்து கொண்டனர்.








