முன்னாள் சட்டத்துறை தலைவர் டாமி தாமஸ் எழுதிய சர்ச்சைக்குரிய நூல் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அமைக்கப்படவிருக்கும் அரச விசாரணை ஆணையத்தில் இடம் பெறவிருக்கும் உறுப்பினர்களின் பெயர்கள் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
அந்த ஆணையத்தில் இடம் பெறவிருக்கும் உறுப்பினர்களின் பெயர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் சட்டத்துறை அமைச்சர் அஸலினா ஓத்மான் மூலமாக கொண்டு செல்லப்படும் என்ற அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.
"My Story: Justice in the wilderness" என்ற தலைப்பில் டாமி தாமஸ் எழுதிய அந்த நூல், முன்னாள் சட்டத்துறை தலைவர் இட்ரஸ் ஹாருன், உட்பட பல்வேறு தரப்பினரை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.








