டிஜிட்டல் நெஷ்னல் பெர்ஹாட்டின் புதிய தலைமை செயல்முறை அதிகாரி பதவிக்கு இதுவரையில் மூவரின் பெயர் பரவலாக பேசப்பட்டு வருகிறது. வடக்கு தெற்கு நெடுஞ்சாலை வாரியமான பிளஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ அஸ்மான் இஸ்மாயில்,மஇகா உதவித் தலைவரும், செனட்டருமான டத்தோஸ்ரீ எஸ். வேள்பாரி , மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் முன்னாள் தலைவர் அல் - இஷால் தி கெச்சிக் ஆகியோர் இப்பதவிக்கான போட்டியில் இருப்பதாக தீ எட்ஜ் ஊடக செய்தி கூறுகிறது.
டிஜிட்டல் நெஷ்னல் பெர்ஹாட் தலைமை செயல்முறை அதிகாரி பதவி, இவ்வாண்டு மார்ச் மாதத்தில் இருந்து காலியாக இருந்து வருகிறது. அதன் தலைமைச் செயல் முறை அதிகாரியாக ஈராண்டு கால ஒப்பந்தத்தில் இருந்த ஓகடஸ் ரல்ஃப் மார்ஷல் பதவி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அப்பதவி காலியானது.
மஇகா முன்னாள் தேசியத் தலைவரும் முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சருமான மறைந்த துன் சாமிவேலுவின் புதல்வரான வேள்பாரியும் இப்பதவிக்கு நியமனம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
மஇகாவிற்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாத நிலையில் ஜிஎல்சி கம்பெனிகளில் அதன் பிரதிநிதிகளை நியமிக்கும் ஓர் முயற்சியாக மைக்கா ஹோல்டிங்ஸின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரியான 61 வயது வேள்பாரியின் பெயரும் டிஜிட்டல் நெஷ்னல் பெர்ஹாட்தலைமை செயல்முறை அதிகாரி பதவிக்கு பலமாக அடிப்பட்டு வருகிறது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


