May 22, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணின் உள்ளாடைகளை திருடும் நபரை போலீசார் தேடி வருதல்
தற்போதைய செய்திகள்

பெண்ணின் உள்ளாடைகளை திருடும் நபரை போலீசார் தேடி வருதல்

Share:

தெலுக் இந்தான், மேலோர் பார்க் 2 - டில் உள்ள ஒரு வீட்டில் பெண்ணின் உள்ளாடைகளை திருடி சென்ற ஓர் ஆடவரை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இன்று காலை 10.55 மணியளவில் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் அகமது அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் வீட்டின் வாகனம் நிறுத்தும் இடத்தில் உலர வைத்திருந்த தம்முடைய உள்ளாடைகள் காணாதது கண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

பிறகு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனையிட்ட போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரின் உள்ளாடைகளை திருடி செல்வது அதில் பதிவாகியிருந்ததை தொடர்ந்து போலீசில் புகார் அளித்ததாக அஹ்மத் அட்னான் அறிவித்தார்.

இதுக்கு‌றி‌த்து குற்றவியல் சட்டம் 347 மற்றும் 509 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News