May 22, 2026
Thisaigal NewsYouTube
4 வயது சிறுவனை சித்ரவதை செய்த பாலர்பள்ளி ஆசிரியர் நாளை குற்றச்சாட்டப்படுவார்
தற்போதைய செய்திகள்

4 வயது சிறுவனை சித்ரவதை செய்த பாலர்பள்ளி ஆசிரியர் நாளை குற்றச்சாட்டப்படுவார்

Share:

கடந்த மாதம், நான்கு வயது சிறுவன் ஒருவரை அடித்து சித்ரவதை செய்த குற்றத்திற்காக பெண் ஆசிரியர் ஒருவர் நாளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படுவார்.

25 வயது சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியர் குற்றவியல் சட்டம் 323 ஆவது பிரிவின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார் என்று தெற்கு கிள்ளான் போலீஸ் தலைமை உதவி ஆணையர் சா ஹூங் ஃபாங் தெரிவித்தார்.

கடந்த மே 13 ஆம் தேதி பாதிக்கப்பட்ட அக்குழந்தையின் 33 வயது தந்தை சம்பந்தப்பட்ட பாலர்பள்ளியிலிருந்து தனது மகனை அழைத்து வந்த போது, அவரது உடம்பில் காது, கன்னம், பின்புறம் முதலானவற்றில் வீக்கங்களும் கீறல்களும் இருந்ததைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் செய்திருந்ததாக சா ஹூங் ஃபாங் கூறினார்.

காற்சட்டையில் மலம் கழித்ததற்காக, பாதிக்கப்பட்ட சிறுவனை ஆசிரியர் கையால் அடித்ததாக விசாரணையில் தெரியவந்ததாக சா ஹூங் ஃபாங் மேலும் அறிவித்தார்.

Related News