Jul 28, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

விபத்தில் போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்

Share:

பூச்சோங், மே 06-

பூச்சோங், ஜாலான் பூச்சோங், தாமான் தெனாகா -வில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 29 வயது போலீஸ் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் யமாஹா Y15 ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த லான்ஸ் கார்போரல் ரெனால்டி ரப்டி என்கிற அந்த போலீஸ் அதிகாரி, மற்றொரு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரியப்படுகிறது.

பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுத்திப்படுத்தியதை தொடர்ந்து சவப்பரிசோதனைக்காக அவரின் உடல் சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிரிக்பில்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் கு மஷாரிமான் கு மஹ்மூத் கூறினார்.

இச்சம்பவம் குறித்து சாலை போக்குவரத்து சட்டம் 1987 - இன் 41 (1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கு மஷாரிமான் மேலும் தகவல் வெளியிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்