Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மூடா கட்சி மிரட்டுவதா
தற்போதைய செய்திகள்

மூடா கட்சி மிரட்டுவதா

Share:

மற்றவர்களை நிந்திப்பதற்கும், துன்புறுத்துவதற்கும் தமது அதிகாரத்தை என்றுமே பயன்படுத்தியது கிடையாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தியுள்ளார்.

வழக்கிலிருந்து துணைப்பிரதமர் அகமட் ஜாஹிட் ஹமிடி விடுவிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால் நடப்பு அரசாங்கத்திற்கு தாங்கள் வழங்கி வந்துள்ள ஆதரவு மீட்டுக் கொள்ளப்படும் என்று மூடா கட்சி தலைவர் சையத் சாதிக் அப்துல் ரஹ்மான் மிரட்டிருப்பது தொடர்பில் பிரதமர் விளக்கம் தந்துள்ளார்.

அகமட் ஜாஹிட் சம்பந்தப்பட்ட விவகாரம் தமது அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல என்பதையும் டத்தோ ஶ்ரீ அன்வார் தெளிவுபடுத்தினார்.

வழக்கை விசாரணை செய்தவர்கள் எஸ்.பி.ஆர்.எம் மற்றும் போலீஸ்துறை ஆகும். நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியது சட்டத்துறை அலுவலகமாகும். தீர்ப்பளித்தது நீதிபதியாகும். நிலமை இவ்வாறு இருக்க இதில் தம்முடைய பங்களிப்பு எங்கிருந்து வந்தது என்று டத்தோ ஶ்ரீ அன்வார் கேள்வி எழுப்பினார்.

Related News