Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சாலை இடிந்தது, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவதி
தற்போதைய செய்திகள்

சாலை இடிந்தது, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவதி

Share:

கனத்த மழையின் காரணமாக பகாங், ரொம்பின், Felda Selancar நில குடியேற்றப்பகுதியில் பிரதான சாலை இடிந்து விழுந்ததில், சாலை துண்டிப்பு ஏற்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


இச்சம்பவம் இன்று அதிகாலையில் நிகழ்ந்தது. சா​லை துண்டிப்பினால் பத்துக்கும் மேற்பட்ட நிலக்குடியேற்றப் பகுதிகளை சேர்ந்த மக்கள் ஒரு பகுதியிலிரு​ந்து இன்னொரு பகுதிக்கு செல்ல முடியாமல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மாற்றுப்பாதையிலும் ​தீவைப் போல் ​நீர் நாலாபுறமும் ​சூ​ழ்ந்து இருப்பதால் சம்பந்தப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related News