நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஒற்றுமை அரசாங்கத்தின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மம்பாவ் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களாக போட்டியிடும் மம்பாவ் வேட்பாளர் யாப் இயூ வெங் மற்றும் ரெப்பா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் எஸ். வீரப்பன் ஆகியோர் இந்நிகழ்விற்கு சிறப்பு வருகை புரிந்தனர்.ஆலயத் தலைவர் கே. ராமையா, வருகை தந்தவர்களை வரவேற்று மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்ததோடு, தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஆசிர்வதித்தார். இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகத்திற்கு அரசாங்கத்திடமிருந்து மானிம் பெற்று தருவதில் மம்பாவ் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்ள மீண்டும் போட்டியிடும் யாப் இயூ வெங் கும் ரெப்பா தொகுதியை தற்காத்துக்கொள்ள போட்டியிடும் வீரப்பனும் உதவி நல்கியிருப்பதும் நினைவுகூறப்பட்டது. மக்களுக்கும், ஆலய நடவடிக்கைகளுக்கும் தொடர்ந்து உதவிடும் இது போன்ற சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

Related News

சொத்துப் பிரகடன வழக்கு: இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான குற்றச்சாட்டு ஆகஸ்ட் 27-க்கு ஒத்திவைப்பு

260 மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகளுக்கும் கட்டாய போதைப் பொருள் பரிசோதனை: மலேசிய விமானப் போக்குவரத்து குழுமம் அதிரடி உத்தரவு

பச்சிளம் குழந்தையைக் கொலை செய்ததாக 19 வயது மாணவி மீது கொலைக் குற்றச்சாட்டு

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு


