Oct 10, 2026
Thisaigal NewsYouTube

எம்ஐஒய்சி தேசிய நிலை இளைஞர் அமைப்புப் பிரிவின் வெற்றியாளர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எம்ஐஒய்சி தேசிய நிலை இளைஞர் அமைப்புப் பிரிவின் வெற்றியாளர்

கோலாலம்பூர், ஜூன்.15-

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் பிரதான விருதுகளில், தேசிய நிலை இளைஞர் அமைப்புப் பிரிவில் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டது எம்ஐஒய்சி என்றழைக்கப்படும் மலேசிய இந்திய இளைஞர் மன்றம். இந்த அங்கீகாரம், இளையோர் தலைவர்களை வளர்க்கும் 'Generation Rise, Lead and Serve' திட்டம் போன்ற அவர்களின் முக்கிய முயற்சிகளை முன்னிலைப்படுத்துகிறது.

1991 இல் நிறுவப்பட்ட எம்ஐஒய்சி, நாடு முழுவதும் 11 ஆயிரத்து 900-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடனும் 123 கிளைகளுடனும், நாட்டின் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, முற்போக்கான இளைஞர் அமைப்புகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்த விருது, நாட்டின் வளர்ச்சிக்குச் சிறுபான்மைத் தலைமை குறிப்பிடத்தக்கப் பங்கை வகிக்க முடியும் என்பதற்கு ஒரு தெளிவானச் சான்றாகும் என எம்ஐஒய்சி தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →