Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஆவணமின்றிய 188 அந்நியர்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆவணமின்றிய 188 அந்நியர்கள் கைது

கோலாலம்பூர், ஜூன்.12-

கோலாலம்பூர் மையப் பகுதியான புடுவில் உள்ள இரவு கேளிக்கை இன்னிசை விடுதிகளில் குடிநுழைவுத் துறையினர் இன்று விடியற்காலை வரை மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் பயண ஆவணமின்றிய 188 அந்நியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு தொடங்கி, இன்று அதிகாலை 2 மணி வரை நடத்தப்பட்ட இந்த மாபெரும் சோதனை நடவடிக்கையில் கேளிக்கை மையங்களில் இருந்த 310 பேரிடம் சோதனை செய்யப்பட்டது. இதில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 188 அந்நியர்கள் பிடிபட்டதாகக் குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.

பிடிபட்டவர்களில் 185 இந்தோனேசியர்கள் ஆவர். மொத்தம் 106 ஆண்கள், 79 பெண்கள் கைது செய்யப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.

21 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவர்கள், தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று குடிநுழைவுத்துறை மேலும் கூறியது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு