Mar 16, 2026
Thisaigal NewsYouTube
3 பள்ளிகள் இவ்வாரம் இறுதியில் திறக்கப்படும்
தற்போதைய செய்திகள்

3 பள்ளிகள் இவ்வாரம் இறுதியில் திறக்கப்படும்

Share:

டுங்ஙுன்னில் வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டிருக்கும் மூன்று பள்ளிகள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

பசிர் ராஜா, கம்போங் ஷூக்கோர்,மின்டா தாலோங் ஆகிய மூன்று தேசிய பள்ளிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக திரெங்கானு மாநிலக் கல்வி துறையின் இயக்குநர் ஜெலானி சூலோங் கூறினார்.

டுங்ஙூன் மாவட்ட கல்வி அலுவலகத்தின் நல்லதொரு முயற்சியினால் மூன்று பள்ளிகளிலும் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் அப்பள்ளிகள் திறக்கப்படும் என்று ஜெலானி சூலோங் தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களில் அனைத்து பள்ளிகளும் விடுமுறைக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ள வேளையில் டுங்ஙுன்னில் உள்ள மூன்று பள்ளிகளில் மட்டுமே தவிர்க்க முடியாத வெள்ளப் பேரிடரினால் விடுப்பு வழங்கப்பட்டதாக அவர் விவரித்தார்.

Related News