Sep 28, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் நிலவி வரும் கடும் வெப்பநிலை: சுகாதார அமைச்சு எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் நிலவி வரும் கடும் வெப்பநிலை: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், மார்ச்.25-

மலேசியாவில் நிலவி வரும் கடும் வெப்பநிலை குறித்து மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டில் பல பகுதிகளில், வெப்பநிலையானது தற்போது “எச்சரிக்கை நிலை 1” -இல் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதாவது, ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலையானது, 35°C முதல் 37°C வரையில், குறைந்தது மூன்று நாட்கள் வரையில் நீடிக்கவுள்ளது.

இதில் கெடா மாநிலத்தின் பல பகுதிகளிலும், பினாங்கு வடக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களிலும், பேராக் மாநிலத்தில் ஹுலு பேராக், செலமா, கோல கங்சார் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்நிலை நீடிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடும் வெப்பம் மனித உடல்நலத்திற்கு தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

மேலும், கடுமையான வெப்பநிலை காரணமாக உடம்பில் நீர்ச்சத்து குறைவு, குழப்பம், மயக்கம் அல்லது கோமா நிலை கூட ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்