பாஸ் கட்சி முழு ஆதரவு
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவினால், அடித்தளமிடப்பட்டுள்ள மலாய்க்காரர்கள் பிரகடனத்திற்குப் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹடி அவாங் உட்பட அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் தங்களின் பிளவுப்படாத ஆதரவை தெரிவித்துள்ளனர்.
மலாய்க்காரர்கள் ஒன்றுப் படவும், அவர்களின் ஒற்றுமை மேலோங்கவும், இஸ்லாத்தின் போராட்ட கொள்கைக்கு புத்துயிர் அளிக்கவும், துன் மகாதீரால் முன்னெடுக்கப்படுள்ள மலாய்க்காரர்கள் பிரகடனத்துடன் பாஸ் கட்சி தன்னை பிணைத்துக்கொள்வதாக கூறி, அந்தப் பிரகடனத்தில் ஹடி அவாங் உட்பட முன்னணி தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
மலாய்க்காரர்களின் போராட்டத்திற்காக நிறுவப்படும் கட்டமைப்புக்கு வலிமை தேவை. இல்லையெனில், அவர்கள் வலிமை இழந்து விடுவர். நாங்கள் இன வெறியர்கள் அல்ல. ஆனால் அதுதான் அடிப்படை என்றார் ஹடி அவாங்.








